புகையில்லா போகியை கொண்டாடுங்கள் – பொதுமக்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அட்வைஸ்
போகிப் பண்டிகை அன்று பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், டயர் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசடைகிறது. இதனால் ஏற்படும் அடர்புகை காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமங்கள் ஏற்படுவதோடு, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பொதுமக்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில் போகியன்று பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் போகி மற்றும் அதற்கு முந்தைய நாள் காற்றின் தரத்தின் கண்காணிக்கவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.