இரண்டாவது முறை கர்ப்பமாகியுள்ள பிரபலம்… மன்னர் சார்லசுக்கு ஆபத்து என பரவும் வதந்தி
அமெரிக்க சமூக ஊடகப் பிரபலமான ஒரு பெண் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ள நிலையில், அவரது குழந்தையால் மன்னர் சார்லஸ் உயிருக்கு ஆபத்து என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
மகாராணியாரின் மறைவின்போது பரவிய வதந்தி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழும் த்ரிஷா (Trisha Paytas, 35), ஒரு சமூக ஊடகப் பிரபலம். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தபோது, இருவரையும் இணைத்து சமூக ஊடகங்களில் பெரும் வதந்திகள் பரவின.
மகாராணியின் உயிர் பிரிந்த அடுத்த நொடி, த்ரிஷாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், அது மகாராணியின் மறுபிறவி என்றும், த்ரிஷா அந்தக் குழந்தைக்கு எலிசபெத் என்று பெயர் வைத்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவ, பின்னர், அது உண்மையில்லை என மறுப்பு தெரிவிக்க, டிக்டாக்கில் நிறைமாத கர்ப்பிணியான த்ரிஷா வீடியோ ஒன்றை வெளியிடவேண்டியதாயிற்று.
இரண்டாவது முறை கர்ப்பமாகியுள்ள பிரபலம்… மன்னர் சார்லசுக்கு ஆபத்து என பரவும் வதந்தி | Celebrity Pregnant Danger King Charles Rumor
செப்டம்பர் மாதம் 14ஆம் திகதிதான் த்ரிஷாவுக்கு குழந்தை பிறந்தது. தன் மகளுக்கு Malibu Barbie Paytas-Hacmon என்று பெயரிட்டுள்ளார் அவர்.
இரண்டாவது முறை கர்ப்பம்
இந்நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் த்ரிஷா. சொல்லிவைத்தாற்போல இன்று காலை பிரித்தானிய மன்னர் சார்லஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல, மீண்டும் வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.