குக் வித் கோமாளியில் அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ எனும் நிகழ்ச்சியில் முக்கியமான இரண்டு நடுவர்கள் விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஒரு சுவைமிக்க நிகழ்ச்சிதான் ‘குக் வித் கோமாளி’ எனும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 5 வது நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது.
இந்த சீசன் 5 இல் யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து முக்கியமான நடுவர்கள் விலகப்போவதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் தொடர்ந்து நடுவராக பணியாற்றி வந்த ‘வெங்கடேஷ் பட்’ ஐந்தாவது சீசனில் தான் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இன்னுமொரு நடுவரான ‘தாமு’ எனும் செஃப் உம் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு முக்கியமான நபர்கள் விலகப்போகும் நிலையில் சீசன் 5 எப்படி இருக்கப்போகிறது என்பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.