‘நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ – ஓராண்டு கால இயக்கத்தை தொடங்கும் மத்திய அரசு
இந்தியக் குடியரசின் 75-வது ஆண்டினை நினைவுகூரும் வகையில், இந்தியா முழுமைக்குமான ‘நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ என்ற ஓராண்டு கால இயக்கத்தை குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நாளை டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்கி வைக்கிறார்.
இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கான நமது கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதையும், நமது தேசத்தைப் பிணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுவதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு தழுவிய இந்த முன்முயற்சி, அரசியலமைப்புக் கட்டமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள குறிக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான பெருமை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு குடிமகனும் பல்வேறு வழிகளில் பங்கேற்கவும், நமது ஜனநாயகப் பயணத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இது வாய்ப்பளிக்கும்.
இந்த நிகழ்ச்சியின் போது, நியாய சேது தொடங்கப்படும். இது சட்ட சேவைகளை கடைசி மைல் வரை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சட்டத் தகவல், சட்ட ஆலோசனை, சட்ட உதவி ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கும். இதனால் மேலும் உள்ளடக்கிய நியாயமான சமுதாயம் உருவாகும். ‘நீதிக்கான முழுமையான அணுகலுக்குப் புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்’ என்ற திட்டத்தின் சாதனைக் கையேடும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியத் தலைமை வழக்கறிஞர் ஆர் வெங்கட்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கின்றனர்.