ஆண்டுக்கு ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் மத்திய அரசின் பீமா யோஜனா காப்பீடு!

அனைத்து மக்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தின் பலன் கிடைக்கும் வகையில், பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்ற காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டு ப்ரீமியமாக வெறும் ரூ.436 செலுத்தினால் ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா காப்பீடு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை செயல்பாட்டில் இருக்கும். இதில் 18 வயது முதல் 55 வயதிற்குள் உள்ளவர்கள் இணையலாம்.
இந்த இன்சூரன்ஸ் எடுப்பதற்கு வங்கி கணக்கு வைத்திருப்பது கட்டாயம். காப்பீடு எடுத்த பின்பு வங்கிக் கணக்கு மூடப்பட்டாலோ அல்லது ப்ரீமியம் வரவு வைக்க போதிய பேலன்ஸ் இல்லாமல் போனாலும் இந்தக் காப்பீடு காலாவதியாகிவிடும்.
இந்தக் காப்பீடு திட்டம் ஒரு வருடத்திற்கு மட்டும்தான் இன்சூரன்ஸ் கவரேஜ் கொடுக்கும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் இதைப் புதுப்பிக்க வேண்டும். இந்தக் காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை ஏதும் செய்யத் தேவையில்லை. ஆனால், குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
காப்பீடு திட்டத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை ரூ.436 ப்ரீமியம் செலுத்தினால் போதும். மட்டுமே. ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்தில் சேர்ந்தால், அந்த நாளில் இருந்துதான் ப்ரீமியம் கணக்கிடப்படும். இத்திட்டத்தில் சேர்ந்த 45 நாட்கள் கழித்து இன்சூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும்.
ஏதாவது ஒரு கணக்கில் இருந்து மட்டுமே இந்தக் காப்பீடு திட்டத்தில் சேர முடியும். ஒரு வருடம் முடியும்போது அடுத்த வருடத்திற்கான ப்ரீமியம் தொகையை வங்கி கணக்கிலிருந்து தானாகவே வரவு வைக்கும் வசதியும் இருக்கிறது.