மத்திய இடைக்கால பட்ஜெட் | “எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை” – ரகுநாதன்
செய்தியாளர்: ராஜ்குமார்
மத்திய பட்ஜெட் குறித்து இந்திய தொழில் முனையத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய பட்ஜெட் எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது. வேலை வாய்ப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பட்ஜெட் தாக்கல் நேரத்தில் கூட போர் நடக்கும் இஸ்ரேல் பகுதிக்கு 10 ஆயிரம் பேர் வேலைக்கு செல்லும் நிலை இருக்கிறது.
கார்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகை கூட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியதால் வேலை வாய்ப்பு இல்லாமல் போகுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு அறிவிப்புகள் எதுவும் இல்லை.