கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 4 நிலைகளின் அறிகுறிகள்.. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற வழிகள்..!
வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே பொதுவாக காணப்படும் புற்றுநோயில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது. கருப்பை வாய் என்பது கருப்பையின் கீழ் பகுதி, இது கருப்பையை யோனியுடன் இணைக்கிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை வளரும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் காணப்படுகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது 15 முதல் 44 வயது வரையிலான இந்திய பெண்களில் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெரும்பாலும் ஹூமன் பாப்பிலோமா வைரஸுன் (HPV) அடிப்படையான தொற்றுடன் தொடர்புடையவை, இது பொதுவாக பாலியல் ரீதியாக பரவுகிறது. இந்த வைரஸ் கர்ப்பப்பை வாய் செல்களில் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை ஏற்படுத்தலாம், இது இறுதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இளம் வயதிலேயே கொடுக்கப்பட்டால், ஹூமன் பாப்பிலோமா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டால், அது தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை மட்டுமின்றி கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மெதுவாக வளரும் நோயாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறியப்படாவிட்டால், அது வயிறு, கல்லீரல், சிறுநீர்ப்பை அல்லது நுரையீரல் போன்ற உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயின், ஆரம்ப அறிகுறிகள் மற்றும் பொதுவான அறிகுறிகள், நோயறிதல் மற்றும் அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்…
அறிகுறிகள்:
இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது என்பதால் நோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது மற்றும் முதன்மையான அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் முதல் நிலைக்கான சில பொதுவான அறிகுறிகள்…
– உடலுறவுக்கு பிறகு பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்படுவது
– மாதவிடாய் அல்லது மாதவிடாய் நின்ற பின் இடையே ஒழுங்கற்ற ரத்தப்போக்கு ஏற்படுதல்
– உடலுறவின் போது துர்நாற்றம் வீசும் யோனி வெளியேற்றம் அல்லது வலி
– சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல்
வயிற்றுப்போக்கு
– மலக்குடலில் இருந்து ரத்தம் வெளியேறுதல்
– சோர்வு
– எடை இழப்பு
– பசியிழப்பு
-இடுப்பு அல்லது வயிற்று வலி
நோய் கண்டறிதல் முறை:
பேப் பரிசோதனையுடன் கூடிய மகளிர் மருத்துவ பரிசோதனையானது, புற்றுநோய்க்கு முந்தைய அறிகுறிகளையும், கோளாறுகளையும் ஆராய்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் பெரும்பாலான நிகழ்வுகளை கண்டறிய உதவுகிறது.
HPV வைரஸிற்கான கர்ப்பப்பை வாய் செல்களை குறிப்பாக சரிபார்க்க HPV மூலக்கூறு சோதனை போன்ற பிற சோதனைகள் செய்யப்படுகின்றன.
சந்தேகத்திற்கிடமான புற்றுநோயின் விரிவான ஆய்வுக்கு, பஞ்ச் பயாப்ஸி (punch biopsy) அல்லது எண்டோசர்விகல் க்யூரெட்டேஜ் (endocervical curettage) போன்ற பல்வேறு நுட்பங்கள் மூலம் பயாப்ஸி செய்து திசுக்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு ஆய்வுகள், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மற்றும் சிறுநீர்ப்பை, மலக்குடல், குடல் மற்றும் வயிற்று குழி ஆகியவற்றின் கதிரியக்க மதிப்பீடு ஆகியவை உடலின் மற்ற உறுப்புகளுக்கு நோய் பரவியுள்ளதா? என்பதைக் கண்டறிய செய்யப்படும் பிற சோதனைகள் ஆகும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் நிலைகள்:
பிற புற்றுநோய்களைப் போலவே, கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது – நிலை I, நிலை II, நிலை III மற்றும் நிலை IV. நிலை I என்பது பெரும்பாலும் அறிகுறிகளின்றி கண்டறியப்படாமல் இருக்கும் மற்றும் புற்றுநோய் கருப்பை வாயில் மட்டுமே உள்ளதையும், பிற பகுதிகளுக்கு பரவவில்லை என்பதையும் குறிக்கிறது.
வயதாகும் அறிகுறிகளை அகற்றும் போடாக்ஸ் சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்…
மூன்றாம் நிலையானது யோனி மற்றும் இடுப்பு சுவரின் கீழ் பகுதி வரை கர்ப்பபை வாய் புற்றுநோய் பரவியதை குறிக்கிறது. இறுதியாக நான்காம் கட்டத்தில் அது சிறுநீர்ப்பை, மலக்குடல் அல்லது எலும்புகள் அல்லது நுரையீரல் போன்ற உடலின் மற்ற பகுதிகளில் ஊடுருவுகிறது.
தடுப்பு நடவடிக்கைகள்:
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது, பேப் ஸ்மியர் ஸ்கிரீனிங் மற்றும் மூலக்கூறு சோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை இந்த பயங்கரமான நோயிலிருந்து காக்கவும், இறப்பு சதவீதத்தை குறைக்கவும் உதவுகிறது.