இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்திரபாபு நாயுடு ஆதரவாளர்கள்!

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய சிவா, சத்யா ஆகிய படங்கள் இந்திய சினிமாவில் திருப்புமுனையாக அமைந்ததாக சினிமா விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஆந்திராவில் முதல்வராக இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் பயணத்தை மையமாக வைத்து இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘வியூகம்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் நடித்துள்ளார். தமிழில் கோ, அஞ்சாதே ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர். இந்தப் படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் அமீர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

வன்முறை, கவர்ச்சியென ஏ சர்பிகேட் படங்களை இயக்குவதில் சர்ச்சையான ராம் கோபால் வர்மா தற்போது யு சர்பிகேட் படத்தினை இயக்கியுள்ளபோதும் பிரச்னைகள் வெடித்துள்ளது. காரணம் படத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாணை நகைச்சுவையாக சித்தரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

இதனை முன்னிட்டு இயக்குநர் ராம் கோபால வர்மா அலுவலம் முன்பாக போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தியும் தகாத வார்த்தைகளை பேசியும் இயக்குநரை கீழே வரும்படி மிரட்டினார்கள். பின்னர் காவல்துறையினர் வரவே கலைந்து சென்றதாக இயக்குநர் பதிவிட்டுள்ளார்.

தனது எக்ஸ் பதிவில் ராம் கோபால் வர்மா, “சந்திரபாபு நாயுடு, பவன்கல்யாண் உங்களது நாய்கள் எனது அலுவலகத்தில் வந்து குரைத்துக் கொண்டிருந்தது; காவலர்கள் வரவே ஓடிவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *