சீஸ்… அளவிற்கு அதிகமானால் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும்!
பொதுவாகவே குழந்தைகளுக்கு சீஸ் உணவு மிகவும் பிடிக்கும். இன்றைய துரித உணவு கலாச்சாரத்தில், பீட்சா பர்கர் என அனைத்திலும் சீஸ் நிரம்பியுள்ளது.
எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. சீஸை வயது வந்தவர்களும் பெரியவர்களும் கட்டுப்பாடுடன் சாப்பிடும்போது பிரச்சனை ஏதும் வராது. ஆனால் குழந்தைகள் சீஸ் அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
உடல் பருமன் இருப்பவர்கள் சீசை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் கலோரியும் கொழுப்பு சத்தும் மிக அதிகம். சீசல் அதிக கால்சியம் இருப்பதால் அது பற்களுக்கும் எலும்புகளுக்கும் ஆரோக்கியமானது என்றாலும், அளவிற்கு மிஞ்சினால் எடை கூடுவது உறுதி.
உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், சீஸை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. அதிக புரதம் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லதல்ல.
பால் தொடர்பான ஒவ்வாமை இருப்பவர்கள், சீசை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு சீஸ் ஜீரணமாகாமல், வயிற்றுப்போக்கு வாயு வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நீரிழிவு என்னும் இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீஸை அளவோடு சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் அதில் கலோரிகளும் அதிகம். கொழுப்புச்சத்தும் அதிகம். இவை இரண்டுமே நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.
சீஸில் கால்சியம் புரதம், வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, ஜிங்க், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்திருந்தாலும் கவனமாக சாப்பிடவில்லை என்றால், கலோரி மளமளவென ஏறிவிடும்.
சீஸில் இருக்கும் ஈரப்பதத்தின் அடிப்படையில், ஹார்ட் சி சாப்ட் சீஸ் என இரு வகைகள் உள்ளது. இதில் சாஃப்ட் சீசில் கலோரிகள் குறைவு என்று கூறுகின்றனர் நிபுணர்கள். எனவே, சீஸை சாப்பிடும் ஆசை உள்ளவர்கள் சாப்ட் சீஸ் வகையை தேர்ந்தெடுக்கலாம்.