சிறுத்தையே இந்த கார் கூட போட்டி போட்டா தோத்து போகும்! ராக்கெட் வேகத்துல போற கார் பற்றி தெரியுமா?

டெஸ்லா நிறுவனம் தனது புரோடக்ஷன் மாடல் ரோடுஸ்டர் காரை தற்போது வெற்றிகரமாக டிசைன் செய்து தயார் செய்துள்ளது. இந்த கார் 0-96 கிலோமீட்டர் வேகத்தை வெறும் ஒரு நொடியில் பிக்கப் செய்துவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டெஸ்லா நிறுவனம் தானியங்கியாக இயங்கும் கார்களை தயாரிக்கும் உலகின் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் தனது தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய கார்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அதன்படி உலகின் வேகமான காரை தற்போது தயாரிக்க முடிவு செய்துள்ளது.

தற்போது உலகின் வேகமான காராக ரீமெக் நிவேரா என்ற கார் இருக்கிறது இந்த கார் 0 முதல் 96 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 1.74 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் தற்போது இதற்கு போட்டியாக டெஸ்லா நிறுவனம் உலகின் அதிவேகமாக இயங்கும் காரை தயாரிக்க முடிவு செய்து இதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டது.

இந்த காருக்கு டெஸ்லா ரோடுஸ்டர் என பெயர் வைத்திருந்தது. இந்நிலையில் இந்த கார் குறித்த ஆரம்ப கட்ட ஆய்வில் இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.94 நொடியில் எட்டிப் பிடிக்கும் என கூறப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் புரோட்டோடைப் மாடல்கள் எல்லாம் அறிமுகமாக இருந்த நிலையில் தற்போது இதன் புரொடெக்ஷன் மாடல் டிசைன் சமீபத்தில் உறுதியாகி உள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான்மஸ்க் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் உலகின் வேகமான காரை தற்போது தயாரிக்க முடிவு செய்துவிட்டது. இந்த கார் முன்னரே சொன்னது படி 0-96 கிலோமீட்டர் வேகத்தை 1நொடியில் பிக்கப் செய்து விடும். தற்போது புரொடக்ஷன் மாடலுக்கான வடிவமைப்பு எல்லாம் தயாராகி உள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரை புக் செய்தவர்களுக்கான டெலிவரி எல்லாம் 2025-ம் ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் வேகமான கார் என்பதால் இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல போட்டி இருக்கும் அதே நேரத்தில் இந்த காரின் விலையும் அதிகமாக இருக்கும் இதனால் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எத்தனை நபர்கள் இந்த காரை வாங்குவார்கள் என்பது இனி தான் தெரியவரும்.

டெஸ்லா நிறுவனம் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு புரட்சிகளை செய்து வருகிறது. முதல் முறையாக உலகின் தானியங்கி காரை தயாரித்து விற்பனை செய்து நிறுவனமாக இந்நிறுவனம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது. அதன் பின்னர் சைபர் டிரக் காரை முதன்முறையாக அறிமுகம் செய்தது. இந்த காரும் நல்ல பெயரை பெற்ற நிலையில் தற்போது புதிய காரை அறிமுகம் செய்யப் போகிறது.

டெஸ்லா நிறுவனத்தின் இந்த ரோடுஸ்டர் உலகில் வேகமாக செல்லும் காரின் அத்தியாத்தையே மாற்றி வரலாறு படைக்கப் போகிறது. உலகின் வேகமாக கார் என இது பெயர் பெற்ற நிலையில் பல நிறுவனங்கள் இனி இது போன்ற வேகமான கார்களை தயாரிக்க முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேகமான கார் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இனி உலகில் வேகமான கார்கள் ராக்கெட் இணையாக வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டெஸ்லா நிறுவனத்தின் ரோடுஸ்டர் கார் வேகத்தை ராக்கெட் வேகத்துடன் ஒப்பிடும்போது பத்து ராக்கெட்டுகளை காரின் பின்புறம் கட்டி ராக்கெட்டை செலுத்தினால் எவ்வளவு வேகத்தில் செல்லுமோ அந்த அளவுக்கு இந்த டெஸ்லா காரின் வேகம் என்பது இருக்கிறது. காரின் வேகம் மட்டுமல்ல இந்த காரில் உட்புறம் பாதுகாப்பு அம்சங்களும் அதிகமாக இருக்கிறது. இது குறித்து தகவல்கள் எல்லாம் பின்னர் வெளியாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *