சென்னை-அயோத்தி விமான கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சியில் பயணிகள்.!!
சென்னையில் இருந்து அயோத்தி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விமான கட்டணம் வரிகள் உள்பட ₹6,499 என முடிவு செய்து, கடந்த 13ஆம் தேதி முன்பதிவு தொடங்கியது.
முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது. இதனால் ஒரு டிக்கெட்டின் விலை ₹27,000 வரை விற்கப்படுவதாக பயணிகள் புலம்பி வருகின்றனர்.