சென்னை Ford தொழிற்சாலைக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு.. மாஸ்ஸான கார் அறிமுகம் செய்யும் ஃபோர்ட்..!
இந்திய ஆட்டோமொபைல் துறையில் தனக்கெனத் தனி இடத்தைக் கொண்டு இருந்த ஃபோர்ட் நிறுவனம் இடம் தெரியாமல் காணாமல் போனது மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருந்த 2 தொழிற்சாலையில் ஒன்றை டாடா குழுமத்திற்கு விற்றுவிட்டு, சென்னையில் இருக்கும் தொழிற்சாலையை மட்டும் விற்க மனமில்லாமல் 2021 ஆம் ஆண்டில் உற்பத்தியை நிறுத்தப்பட்டதில் இருந்து அப்படியே வைத்துள்ளது.இந்தத் தொழிற்சாலையை வாங்க டாடா மோட்டார்ஸ், JSW குரூப் உட்படப் பல நிறுவனங்கள் முயற்சி செய்தும் அனைவருக்கும் மறுப்புத் தெரிவித்தது.
இதன் மூலம் கடந்த சில மாதங்களாக ஃபோர்ட் மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்குள் இறங்குவதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான Ford இந்தியாவில் புதிய மாடல் Endeavour காருக்கான பேடென்ட் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஃபோர்ட் நிறுவனம் சென்னை தொழிற்சாலையைப் பயன்படுத்தித் தனது லேட்டெஸ்ட் எடிஷன் Endeavour காரை இந்திய சந்தைக்குக் கொண்டு வர களத்தில் இறங்குவதாகத் தெரிகிறது.சென்னை தொழிற்சாலையை விற்க முடியாது.. Ford எடுத்த அதிரடி முடிவு.. JSW குரூப் ஷாக்..!
2022 ஆம் ஆண்டில் ஃபோர்ட் நிறுவனம் சர்வதேச சந்தையில் Endeavour காரை அறிமுகம் செய்தது, தாய்லாந்தில் இந்தக் காரை Ford Everest SUV என்ற பெயரில் விற்கப்பட்டு வரும் வேளையில் இதை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியின் முதல் படியாக Endeavour டிசைனுக்கான பேடென்ட் பெற்ற விண்ணப்பித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே தொழிற்சாலை வைத்திருக்கும் காரணத்தால் ஃபோர்ட் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் வருடத்திற்கு 2500 கார்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வர முடியும். இதேவேளையில் போர்டு சென்னை தொழிற்சாலையில் புதிய Endeavour கார்-ஐ அசம்பிள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது சந்தையில் Endeavour காருக்குப் போட்டியாக இருக்கும் டோயோட்டா பார்சூனர் கார் விலை 60 லட்சம் ரூபாயை தாண்டியிருக்கும் வேளையில், இறக்குமதி செய்யப்படும் Ford Endeavour காரும் இதேவிலையில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஃபோர்டு ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்யத் தயார் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.