சென்னை Mall of Madras: ஒரு கடையின் வாடகை எவ்வளவு தெரியுமா..?
இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமாக மட்டும் அல்லாமல், நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விரைவில் திறக்கப்படும் மால் ஆஃப் மெட்ராஸ், வர்த்தக சந்தையில் முக்கிய பேசு பொருளாக உள்ளது.
சௌகார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் சூளைமேடு போன்ற சென்னையின் பாரம்பரிய வர்த்தக பகுதிகளில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெரம்பூரில் இந்த Mall of Madras அமைந்துள்ளது. சுமார் 18 ஏக்கரில் அமைந்து உள்ள சென்னை SPR CITY-யில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது.
இந்த பிரம்மாண்ட மாலில் 5000க்கும் அதிகமாகக் கடைகள் இருக்கும் வேளையில், இங்கு கடைகளை அமைக்கவும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கமர்சியல் ரியல் எஸ்டேட் தளத்தில் முதலீடு செய்யவும் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது.
Mall of Madras-ல் 180 சதுரடி முதல் 65000 சதுரடி வரையிலான கடைகள் உள்ளது, முதலீட்டாளர்களும், ரீடைல் நிறுவனங்களும் தங்களின் தேவைக்கு ஏற்ப கடைகளைக் குத்தகைக்கு அல்லது மாத வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த மாலில் இருக்கும் கடைகளின் ஆடம்பர தொகை 45 லட்சம் ரூபாய் என்றும், மாதம் சதுரடிககு 100 ரூபாய் அளவில் வாடகை வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்கிறது எஸ்பிஆர் சிட்டி விளம்பரம். இந்த கடைகள் டிசம்பர் 2024ல் அதன் உரிமையாளர்கக்கு வழங்கப்பட உள்ளது.
அப்படியானால் 100 சதுரடி கொண்ட கடைக்கு 10000 ரூபாய் தான் வாடகையா என கேட்கலாம், ஆனால் கடை இருக்கும் இடம், பகுதி, அருகில் இருக்கும் பிராண்ட் அனைத்தும் கருத்தில் கொண்டு வாடகை மாறுபடும். பிரதானமான இடத்தில் கடை இருந்தால் 100 சதுரடி கொண்ட கடைக்கு 50000 கூட வசூலிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை-யின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த மால் ஆப் மெட்ராஸ் சுமார் 12 லட்சம் சதுரடியில் கட்டுப்பட்டு உள்ளது. இந்த மால் கிட்டத்தட்ட 5 அடுக்குமாடிகளில் அமைந்துள்ளது.
மால் ஆப் மெட்ராஸ்-ல் சுமார் 300 கடைகள், 12 ஆங்கர் கடைகள் (முக்கியமான இடத்தில் பெரிய கடைகள்), 9 பிவிஆர் ஸ்கிரீன் தியேட்டர், 2 ஏக்கர் பரப்பளவில் பிராண்ட் மற்றும் மார்கெட்டிங் ப்ரோமோஷன் செய்யும் தளம், 30 உணவு வகைகளுக்கு (Cusines) பிரத்தியேக உணவகங்கள், புட் கோர்ட், 3 தளத்தில் சுமார் 1500 கார் பார்க் செய்யப்படும் அளவுக்கு பார்க்கிங் வசதி.
மால் ஆஃப் மெட்ராஸ் மொத்த மற்றும் சில்லறை சந்தையாக இருக்கப்போகிறது, இந்தியாவிலேயே மிகப்பெரிய வர்த்தக தளமாகவும், வர்த்தகர்கள் மத்தியில் புதிய பந்தம் உருவாக்கும் தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.