சென்னை தேசிய நெடுஞ்சாலை தனியார் லாட்ஜில்.. ஆசையோடு போன கும்பல்.. வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு
கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில், கடலூர் அருகே தங்கும் விடுதியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடியாக சோதித்த போதுதான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் ராமநத்தம் கிராமம் திருச்சி- சென்னையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடலூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில், விருத்தாசலத்தில் இருந்து சுமார் 42 கிமீ தூரத்தில் ராமநத்தம் இருக்கிறது. இதுதான் கடலூர் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் உள்ள ஊராகும்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தத்தில் ஒரு கட்டிடத்தில் தனியார் பாருடன் செயல்படும் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியில் ரகசியமாக விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்
அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது இளம் பெண்ணிடம் 4 ஆண்கள் உல்லாசத்தில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து போலீசார், சிறுமியை மீட்டதுடன், 4 பேரை மடக்கி பிடிக்க முயற்சித்தார்கள். அப்போது 3 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.
மீட்கப்பட்ட பெண்ணை விசாரித்த போது பண்ருட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது. அந்த சிறுமியை திவ்யா(வயது 27) என்ற உறவுக்கார பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி தங்கும் விடுதிக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த அயன்பேரியூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (29), குன்னம் அடுத்த நம்மையூர் கிராமத்தை சேர்ந்த சேகர் (47), பெரம்பலூர் மாவட்டம் செங்குணத்தை சேர்ந்த சக்திவேல் (27) உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் தப்பியோடியவர் பொயணப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயபால்(47) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராமநத்தம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய திவ்யா மற்றும் கார்த்திக், சேகர், சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய ஜெயபாலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.