சென்னை பூவிருந்தவல்லி – கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை- எப்போது தொடக்கம்.? பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
1,500 கோடியில் சென்னை அடையாறு ஆறு சீரமைக்கப்படும். 42 கிமீ நீளமுள்ள அடையாறு ஆறு ரூ.1,500 கோடி செலவில் சீரமைக்கப்படும்
தொழில்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக்குகளை உயர்த்தப்படும்.
கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா 20 லட்சம் சதுர அடியில் 1100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்
ஆயிரம் நபர்களுக்கு ஒன்றிய பணியாளர்கள் தேர்வாணையம் முலம் நடத்தப்படும் தேர்வான ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் 6 மாத உரைவிட பயிற்சி வழங்கப்படும். இதற்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில் திறன் ஆய்வகங்கள் 200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2500 கோடி கல்வி கடன் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
ராமநாதபுரத்தில் கடல் சார் விளையாட்டு மையம் அமைக்கப்படும்
மக்களை தேடி மருத்துவத்திற்கு இதுவரை ஒரு கோடியை 70 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்
தஞ்சாவூரில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் சொல்லி புங்க்கா அமைக்கப்படும்.
பூவிருந்தவல்லி- கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் 2025 ஆண்டு டிசம்பரில் தொடங்கிவைப்பார் என அறிவிப்பு