சென்னை டூ கிருஷ்ணகிரி.. ஒரே நாளில் எகிறியடிக்கும் திமுக.. அறிவாலயம் ஆச்சரிய பிளான்.. அதிரும் தமிழகம்
சென்னையில் இன்று, 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக மாவட்டங்களில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.
விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதேபோல, கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகி உள்ளன.
தமிழகத்தில் எந்த கூட்டணியும் இதுவரை உறுதியாகவில்லை. ஆனால், பலமான கூட்டணியாக திமுக இப்போதும் உள்ளது.. கடந்த முறை அமைந்த கூட்டணியே, இப்போதும் தொடர போவதாக தெரிகிறது. இந்த கூட்டணியிலேயே மேலும் சில கட்சிகள் புதிதாக இணையவிருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், மக்கள் நீதி மய்யத்தின் வருகை எதிர்நோக்கப்பட்டு வருகிறது.
கூட்டணிகள்: இதுஒருபுறம் இருந்தாலும், சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள், கடந்த முறையைவிட அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால், கூட்டணிகளுக்கு தாராளமாக தொகுதிகளை ஒதுக்கும் முடிவில், திமுக இல்லை என்றே தெரிகிறது.
இதுஒருபுறம் இருந்தாலும், திமுகவின் களப்பணிகள் மும்முரமாகி உள்ளன.. திமுகவுக்கு இது மிக முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது..
திமுக கூட்டம்: இந்நிலையில்தான், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு உள்பட பல்வேறு விவகாரங்களுக்கு திமுக பிரத்யேகமாகவே குழு அமைத்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் திமுக தலைமை அறிவித்திருக்கிறது. இதற்கான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக ஜனவரி 24ம் தேதி (இன்று) முதல் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி 24ம் தேதி கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், 27ம் தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.
மதுரை: பிப்ரவரி 28ம் தேதி நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி திமுக நிர்வாகிகளுடனும், 29ம் தேதி சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி திமுக நிர்வாகிகளுடனும், வரும் 30ம் தேதி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெற உள்ளது.
அதன்பிறகு வரும் 31ம் தேதி ராமநாதபுரம், கடலூர் திமுக நிர்வாகிகள் கூட்டமும், பிப்ரவரி 1ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், பிப்ரவரி 2ம் தேதி வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.