Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!
சேதேஷ்வர் புஜாராவின் 66 ரன்கள் மற்றும் சிராக் ஜானியின் 5 விக்கெட்கள் மூலம் ரஞ்சி டிராபியில் விதர்பாவுக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளன.
எலைட் குரூப் – ஏ பிரிவில் சவுராஷ்டிரா அணிக்காக 66 ரன்கள் எடுத்ததன் மூலம் புஜாரா, முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கட், சினி கவாஸ்கர், ராகுல் டிராவிட் ஆகியோட் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் இதுவரை 348 முதல் தர போட்டிகளில் விளையாடி 51.46 சராசரியில் 81 சதங்கள் உதவியுடன் 25835 ரன்கள் எடுத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் இதுவரை 310 முதல் தர போட்டிகளில் 81 சதங்களின் உதவியுடன் 25396 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் 298 முதல் தர போட்டிகளில் 55.33 என்ற சராசரி 68 சதங்கள் உதவியுடன் 23794 ரன்கள் எடுத்துள்ளார்.