வீடே மணக்கும் செட்டிநாடு ஸ்டைல் தேங்காய் அரைத்த குழம்பு: ஓரு முறை இப்படி செய்யுங்க
செட்டிநாடு ஸ்டைல் தேங்காய் அரைத்த குழம்பு, ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
புளி தண்ணீர்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
மல்லித் தூள்- 3 ஸ்பூன்
மிளகுத் தூள்- அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
சர்க்கரை – ½ டேபிள் ஸ்பூன்
தேங்காய் அரைத்தது – ½ கப்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து கிளரவும். வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மஞ்சள் பொடி, சேர்த்து கிளரவும். தொடர்ந்து நன்றாக கிளர வேண்டும். அதில் புளி தண்ணீர் சேர்த்து கிளரவும். கடைசியாக தேங்காய் அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து சர்க்கரை சேர்த்து கிளரவும்.