ரூ 10 நாணயம் கொடுத்தால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி..!
புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை அறித்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்தனர். சிலர் தங்களுக்கு தெரிந்த கடைகளுக்கு சென்று 10 ரூபாய் நாணயங்களை வாங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிக்கன் பிரியாணி வாங்க சம்பந்தப்பட்ட அந்த ஓட்டலுக்கு சென்றனர்.
இதனை அடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு பிரியாணி வாங்கி சென்றனர். பத்து ரூபாய் நாணயம் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இத்தகைய ஆஃபரை அறிவித்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.