Chicken Tenders : சிக்கன் டென்டெர்ஸ்; குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்!
வால்நட் – அரை கப்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
சீரக தூள் – ஒரு ஸ்பூன்
இட்டாலியன் சீசனிங் – ஒன்றரை ஸ்பூன்
எலுமிச்சைபழச்சாறு – அரை பழத்தின் சாறு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பிரட் – 1 துண்டு நறுக்கியது
சில்லி பிளேக்ஸ் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – கால் ஸ்பூன்
சோளமாவு – கால் கப்
மைதா – கால் கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.மிக்ஸியில் நறுக்கிய பிரட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து மைதா, சோளமாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து
பின்னர் சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரட் கிரம்பஸில் பிரட்டி வைத்து கொள்ளவேண்டும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும். சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.
சிக்கன் டென்டெர்ஸ் தயார். குழந்தைகள் விரும்பி சாப்படுவார்கள்.