கோவைக்கு 13 புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த அவர், நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மொத்தம் ரூ.1,274 கோடி மதிப்பீட்டில், 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 273 நிறைவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தல் மற்றும் 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கோவைக்கு 13 புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்தார்
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வடிகால் மற்றும் கான்க்ரீட் சாலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டவரும் மேம்பாலத்தால் அகற்றப்பட்ட பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் சீரமைக்கப்படும்.
ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும்.
15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாய விலை கடைகள், 14 சமுதாய நலக்கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.
இக்கரை பூளுவாம்பட்டி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம் பாளையம்ஊராட்சி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி மற்றும் மாவுத்தம்தி ஆகிய ஊராட்சிகளில் நான்கு பாலங்கள் கட்டப்படும்.
தென்னை மரங்களை அதிகமாக பாதிக்கின்ற நோய் வேர்வாடல் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ரூ.14.4 கோடி நிதி வழங்கப்படும்.
3 இலட்சம் தென்னங்கன்றுகள், ரூ.2 கோடியே 80 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்குஇலவசமாக வழங்கப்படும்.
அகில இந்திய அளவில் 157 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் வங்கி கணக்கில் அப்பணத்தை வரவு வைக்கவும் நடவடிக்கை
கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை.
விலாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கி.மீ நீளத்தில், ரூ.9 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும்.
வார்டு எண் 11 மூங்கில் மடை குட்டை பழங்குடியினர்வசிக்கும் பகுதியில் ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கப்படும்.
மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்தி ஊராட்சிக்குட்பட்ட வாளையார் வனப்பகுதியில் தரை மட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும்.
காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கப்படும்.