பிப்ரவரி 25-ம் தேதி தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, ரூ.16 ஆயிரம் கோடியில் வின் பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் தூத்துக்குடியில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் தொழில்பூங்காவில் சுமார் 408 ஏக்கரில் வின் பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் அமைக்கப்படவுள்ள இடத்தினை சிப்காட் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் தலைமையிலான குழுவினர் அண்மையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அதற்கான ஆயத்தப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 25-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார். அதைதொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெறும் வெள்ள நிவாரண உதவி வழங்குதல் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு 10 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கி பேசுகிறார். இதையடுத்து புதுக்கோட்டையில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு உள்ள திடலில் மேடை அமைக்கும் பணி, பொதுமக்கள் அமர்வதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.