Chikmangalur Chutney : சிக்மங்களூர் சட்னி – இட்லி, தோசை சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2
எள்ளு – 1 ஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
புளி – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடலை பருப்பு, உளுந்து, சீரகம், வரகொத்தமல்லி என அனைத்தும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தும் வறுத்து வாசம் வந்தவுடன், இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, எள்ளு, புதினா, தேங்காய் என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அனைத்தும் நல்ல மிருதுவாக வதங்கியவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் உப்பு மற்றும் புளியை சேர்த்து கலந்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அனைத்தும் ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான சிக்மங்களூர் சட்னி தயார்.
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்க வேண்டும். இதை அப்படியே தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி என அனைத்துக்கும் ஏற்ற சரியான ஜோடி.