சுவிட்சர்லாந்தில் 11ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த குழந்தை: தாய் மீது குற்றச்சாட்டு
2022ஆம் ஆண்டு, சுவிஸ் மாகாணமொன்றில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 11ஆவது மாடியிலிருந்து குழந்தை ஒன்று விழுந்து உயிரிழந்த வழக்கில், குழந்தையின் தாய் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அதிகாரிகள் தற்போது முடிவு செய்துள்ளார்கள்.
11ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த குழந்தை
2022ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Le Lignon என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 11ஆவது மாடியிலுள்ள வீட்டின் ஜன்னலிருந்து குழந்தை ஒன்று கீழே விழுந்து உயிரிழந்தது.
குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு
அந்தக் குழந்தை, ஜன்னல் முதலான இடங்களில் ஏறும் வழக்கம் கொண்டது என ஏற்கனவே தெரிந்திருந்தும், அந்த தாய் பிள்ளை மீது சரியான கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
அத்துடன், ஏற்கனவே ஒரு முறை அந்தக் குழந்தை கஞ்சாவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்தும் தங்களுக்குத் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, கவனக்குறைவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாக அந்தக் குழந்தையின் தாய் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய தற்போது ஜெனீவா அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.