நடிகை அசின் உடன் குழந்தை வேடம்… எதிர் நீச்சல் சாணக்யா யார் தெரியுமா?

ன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அருண் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாணக்கியா நடிகை அசினுடன் குழந்தையாக நடித்தவர் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அருண் காதாபாத்திரத்தில் நடிகர் சாணக்யா நடித்து வருகிறார்.சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும் சீரியல் எதிர் நீச்சல். மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சாணக்யா சிறு வயது முதலே படங்கள், விளம்பரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை கீதா ஸ்ரீயின் மகனான சாணக்யா முதலில் நடித்தது மெட்டி ஒலி சீரியலில் கோபி – விஜயலட்சுமியின் மகனாக நடித்திருந்தார்.

சூர்யா – அசின் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற ‘கஜினி’ படத்தில் அசின் நடித்த விளம்பர படம் ஒன்றில் அவரின் மகனாக சாணக்யா ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். பின்னர் ஜெய் நடித்த ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் ஜெய்யின் சிறு வயது கதாபாத்திரமாக ஒரு சில காட்சியில் நடித்திருந்தார். இதேபோல் அஜித் நடித்த பரமசிவம் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பரமசிவன் திரைப்படத்தில் நடிகை லைலாவின் தம்பியாக நடித்திருப்பார்.தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி திரைப்படத்தில் குழந்தையாகவும் நடித்திருப்பார்.

சின்னத்திரை தொடர் மற்றும் படங்களில் நடித்த சாணக்யா பல விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். தற்போது எதிர் நீச்சல் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகமாக மாறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *