குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு ‘ரவா பூரி’.. எப்படி செய்யலாம்.?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று ‘பூரி’
அதுவும் பூரி மொறு மொறுவென்று இருந்தால் குழந்தைகள் அதை விரும்பி உண்ணுவார்கள்.
ஆனால் எவ்வளவுதான் ட்ரை பண்ணினாலும் சிலருக்கு பூரி மொறு மொறு என்று வராது.
எனவே வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே புரியை எப்படி மொறுமொறுப்பாக செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் இந்த மொறுமொறு பூரியையும் செய்ய உங்களுக்கு சில நிமிடங்களே எடுத்துக்கொள்ளும்.
தேவையான பொருட்கள் :
- எண்ணெய் – தேவையான அளவு
- ரவை – ¼ கிலோ
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
பூரி செய்ய முதலில் ரவையை சுத்தம் செய்து ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
அதையடுத்து மாவில் தேவைக்கேற்ப சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
மாவு சாப்ட்டாக இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து மாவை பூரி செய்யும் பதத்திற்கு பிசையவும்.
மாவை நன்கு பிசைந்தவுடன் தேவையான நேரம் அப்படியே அதை துணியை கொண்டு மூடி ஊற வைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து பூரி சுட தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
தற்போது புரிக்கு தேவையான அளவு மாவை எடுத்து உருட்டி வட்டமாக தேய்த்துக்கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்துள்ள மாவை போட்டு பூரியாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் அருமையான மொறு மொறு ‘ரவா பூரி’ ரெடி…