Chilli Paneer : சுவையான சில்லி பன்னீர்! அருமையான மாலை நேர சிற்றுண்டி!

தேவையான பொருட்கள்
பன்னீரை பொரிக்க
பன்னீர் – 400 கிராம்
சோள மாவு – அரை கப்
மைதா – கால் கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
சில்லி பன்னீர் செய்ய
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4 (நறுக்கியது)
வெங்காயம் – 1 பெரிய துண்டுகளாக நறுக்கியது
குடைமிளகாய் – 1 பெரிய துண்டுகளாக நறுக்கியது
மிளகு தூள் – சிறிதளவு
வினிகர் – ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
வெங்காயத்தாள் வெங்காயம் நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்
கரைத்த சோள மாவு – அரை கப்
வெங்காயத்தாள் கீரை நறுக்கியது – ஒரு கைப்பிடி
செய்முறை
பன்னீரை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில், சோள மாவு, மைதா, உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ள வேண்டும்.
பன்னீர் துண்டுகளை, சோள மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
இதில் வெங்காயம், குடைமிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவேண்டும்.
பின் இதில், வினிகர், சோயா சாஸ், தக்காளி கெட்சப், ரெட் சில்லி சாஸ், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
இதில் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவேண்டும்.
அடுத்து இதில் சோள மாவு கலவையை ஊற்ற வேண்டும்.
அடுத்து வெங்காயத்தாள் வெங்காயம், பொரித்த பன்னீர் துண்டுகள், வெங்காயத்தாள் கீரை சேர்த்து கிளறவேண்டும்.
சுவையான சில்லி பன்னீர் தயார்.
குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.