மாலைதீவை சென்றடைந்த சீன உளவு கப்பல்
இந்திய பெருங்கடல் வழியாக நுழைந்து சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று மாலைதீவை நோக்கி சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பலானது இன்று(22.02.2024) மாலைதீவை சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆராய்ச்சிக்காக மட்டுமே கப்பல் சென்றுள்ளதாக சீனா அரசாங்கம் கூறியுள்ளது.
தகவல்கள் சேகரிப்பு
ஆராய்ச்சிக்காக மாலைதீவு வந்துள்ள இந்த கப்பல் 4,300 டன் எடை உடையதெனவும், இப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்கால இயற்கை பேரிடருக்கான சாத்தியக் கூறுகள், அப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான வசதிகள் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.