சித்திரை மாதம் 2024… ஆன்மீக விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்..!
தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தை வைத்தே வருடம் கணக்கிடப்பட்டது. அப்படி உள்ள ஆன்மீகத்தில் சித்திரையை முதல் மாதமாகவும், பங்குனியை கடை மாதம் என்றும் கூறுவார்கள். உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது.
ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஒரு மாதம் தொடங்கும். அந்த வகையில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம்தான் சித்திரை மாதமாகும். நாம் இன்றைய ஆன்மீக பதிவில் சித்திரை 2024 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதைதெரிந்துக் கொள்ளலாம்.
எண் தமிழ் தேதி ஆங்கில தேதி ஆன்மீக விசேஷங்கள்
1. சித்திரை 01 14 ஞாயிறு சஷ்டி விரதம் , விஷூ , தமிழ் புத்தாண்டு , சபரிமலையில் நடை திறப்பு , அம்பேத்கர் பிறந்தநாள்
2. சித்திரை 04 17 புதன் ஸ்ரீராமநவமி
3. சித்திரை 06 19 வெள்ளி ஏகாதசி விரதம்
4. சித்திரை 07 20 சனி மீனாட்சி திருக்கல்யாணம்
5. சித்திரை 08 21 ஞாயிறு பிரதோஷம் , மகாவீரர் ஜெயந்தி
6. சித்திரை 09 22 திங்கள் புவி நாள்
7. சித்திரை 10 23 செவ்வாய் பௌர்ணமி விரதம் , பௌர்ணமி , சித்ரா பவுர்ணமி
8. சித்திரை 14 27 சனி சங்கடஹர சதுர்த்தி விரதம்
9. சித்திரை 18 01 புதன் திருவோண விரதம் , மே தினம்
10. சித்திரை 21 04 சனி அக்னி நட்சத்திரம் ஆரம்பம் , ஏகாதசி விரதம்
11. சித்திரை 22 05 ஞாயிறு பிரதோஷம்
12. சித்திரை 23 06 திங்கள் மாத சிவராத்திரி
13. சித்திரை 25 08 புதன் அமாவாசை , கார்த்திகை விரதம்
14. சித்திரை 26 09 வியாழன் சந்திர தரிசனம்
15. சித்திரை 27 10 வெள்ளி அட்சய திரிதியை
16. சித்திரை 28 11 சனி சதுர்த்தி விரதம்
17. சித்திரை 29 12 ஞாயிறு ஆதிசங்கரர் ஜெயந்தி , அன்னையர் தினம்
18. சித்திரை 30 13 திங்கள் சோமவார விரதம் , சஷ்டி விரதம்