கிறிஸ்துமஸ் விழா: ‘சென்னையில் மட்டும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு’ – கமிஷனர் தகவல்

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதி, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

நாளை ஞாயிற்றுக்கிழமை இரவும், மறுநாள் திங்கள்கிழமையும் கிறிஸ்துமஸ் விழா கொண்டப்பட உள்ளது. தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகளும், கூட்டுத்திருப்பலியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‘துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் தலைமையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதில் போலீசாருக்கு உதவியாக ஊர்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாளை இரவு முதல் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சிமுறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் சாதாரண உடையில் சென்று கண்காணித்து திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கியமான தேவாலயங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுவார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *