‘குடி’மக்களே உஷார்! விஸ்கி-க்கு Expiry காலம் இருக்காம் பாஸ்.. மீறி குடித்தால் என்னாகும் தெரியுமா..?

மிழ்நாட்டில் இரவு 9.30 மணியாகிவிட்டால் போதும் மதுபானப் பிரியர்கள் பரபரப்பாகி விடுவார்கள். டாஸ்மாக் கடையை 10 மணிக்கு முன்பாகவே மூடிவிடுவார்களே…
சரக்கு கிடைக்குமா அல்லது 10 மணிக்கு மேல் பிளாக்கில் விற்கப்படும் சரக்கு நமக்கு சரியாக வருமா என்றெல்லாம் கவலைப்படத் தொடங்கி விடுவார்கள்.அப்படி பதைபதைத்து வாங்கிச் சென்றும் அருந்தும் மதுபானங்கள் காலாவதியாகி விட்டதா இல்லையா என்றெல்லாம் நிச்சயம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் வாங்கி அருந்தும் விஸ்கி காலாவதியாக ஆகியிருக்கலாம். எல்லா உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் போல மதுபானங்களுக்கும் காலாவதி தேதி ஒன்று உள்ளது. ஒரு விஸ்கி பாட்டிலை திறந்து அதில் பாதியை அருந்திவிட்டால் மீதமுள்ளதை உங்களது அலமாரியில் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதிலுள்ள விஸ்கி விரைவில் காலாவதியாகி விடும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!மிச்சமுள்ள விஸ்கியில் ஆக்ஸினேற்ற விளைவு ஏற்பட்டு காலாவதியாகிவிடும். பாட்டிலில் நிறைய விஸ்கி இருந்தால் அதில் ஆக்ஸிஜன் நுழைவது குறைவாக இருக்கும் என்பதால் காலாவதியாகுவதற்கு கூடுதல் நேரம் ஆகும். குறைந்தளவு இருந்தாலோ சீக்கிரமே காலாவதியாகிவிடும். இப்படி காலாவதியான சரக்கை அருந்துபவர்களும் காலாவதியாகும் வாய்ப்பு உள்ளது.மது அருந்துவது சிலருக்கு மனதை ஆற்றுவதற்குப் பயன்படலாம். அப்படிப்பட்டவர்களும் மற்றவர்களும் தாங்கள் அருந்தும் விஸ்கி காலாவதியாகி விட்டதா இல்லையா என்பதை முன்பே உறுதி செய்து கொள்வது நல்லது தானே!பாட்டிலில் பாதிக்கும் மேல் விஸ்கி இருந்தால் அது காலாவதி ஆவதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம். அதுவே கால் பகுதி மட்டும் இருந்தால் ஆறுமாதத்துக்குள்ளேயே காலாவதியாகிவிடும். பாட்டிலை திறந்துவிட்டால் மதுவில் உள்ள எத்தனால் ஆவியாகி அதன் சுவையை மாற்றிவிடும்.காற்றில் படும் வகையில் இருக்கும் காஸ்ட்லியான ஸ்காட்ச் விஸ்கியும் குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகிவிடும். விஸ்கி காலாவதியாவதை தடுப்பதற்கு ஒரு வழி உள்ளது. பெரிய பாட்டிலில் இருந்து சிறு சிறு பாட்டில்களில் முழுவதுமாக நிரப்பி வைத்துவிட்டால் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.அதே நேரத்தில் சீல் உடைக்கப்படாத விஸ்கி பாட்டில்கள் எப்போதும் கெட்டுப் போகாது. எனவே சீல் உடைக்காத விஸ்கி பாட்டில்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஒயின் போன்று விஸ்கி காலம் போகப்போக சுவையும் தரமும் அதிகரிக்காது.டிஸ்டிலேஷன் செய்யப்பட்டு பேரல்களில் அடைத்து அதை முதிர்ச்சியடைய வைக்கும் செல்முறையினால்தான் சுவையும் தரமும் விஸ்கிக்கு ஏற்படுகிறது. எனவே விலை உயர்ந்த விஸ்கி ரகங்களை வாங்கி அதை சிறிய பாட்டில்களில் ஊற்றி நன்றாக அழுத்தமாக மூடி வைத்து விடுங்கள். நீங்கள் விரும்பும்போது அதை அருந்தி மகிழலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *