அரசு துறைகளில் குடிமக்கள் சாசனம் புதுப்பிக்கப்படுமா?: பிராந்திய மொழிகளில் வைக்க வேண்டும்
அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்க்குள் மக்கள் சேவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இது சம்பந்தமான தகவல் பலகை அரசு துறைகளில் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.இப்பலகையில் மக்கள் எந்தெந்த குறைகளுக்கு யாரை அணுக வேண்டும். யாரிடம் மனு கொடுக்க வேண்டும். இந்த மனுவுக்கு எவ்வளவு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இவைகள் தவிர எந்தெந்த சான்றிதழ்கள் நகராட்சியால் வழங்கப்படும், அதற்கான கட்டணம் எவ்வளவு; எத்தனை நாளுக்குள் இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற விவரங்களும் இந்த தகவல் பலகையில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.இந்த விவரங்களை முழுமையாக அறிவிப்புப் பலகையில் விளம்பரப்படுத்தி, மக்கள் பார்வையில்படும்படி துறை அலுவலங்களில் வாயில்களில் வைக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
ஆனால், புதுச்சேரி அரசின் பல துறை அலுவலகங்களில் இவற்றைக் காண முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.பல துறைகளில் புதுப்பிக்கப்படாமல்2005 ஆண்டு வைக்கப்பட்ட மக்கள் சாசனமே பரிதாபமாக காட்சியளிக்கிறது.சில அரசு துறைகளில் மக்கள் சாசனம் வைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், அறிவிப்புப் பலகைகள் பலவும் சிதிலமாகி விட்டன.
இணையமும் மோசம்ஆன்-லைன் சேவையாகிவிட்ட இக்காலத்தில்,குடிமக்கள் சாசனத்தை துறைகளில் தங்களது இணையதளத்திலும் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அரசு துறைகளில் மோசமாக உள்ளது. குடிமக்கள் சாசனத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வழியில் தமிழிலும், அந்த பிராந்திய மொழிகளிலும் வெளியிடுவதில்லை.