eC3 எலெக்ட்ரிக் காரின் புதிய வேரியன்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்திய Citroen… விலை விவரங்கள் இதோ!

பிரபல பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான சிட்ரோயன் (Citroen) இந்தியாவில் விற்கப்பட்டு வரும் அதன் ஒரே எலெக்ட்ரிக் காரான eC3-ன் லைன்அப்-பில் தற்போது புதிய வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் இந்த நிறுவனம் eC3-ன் டாப்-ஸ்பெக்ஸ் அடங்கிய காராக புதிய ஷைன் வேரியன்ட்டை (Citroen eC3 Shine) அறிமுகப்படுத்தி இருக்கிறது.

புதிய eC3 Shine எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.20 லட்சம் முதல் தொடங்கி ரூ.13.50 லட்சம் வரை செல்கின்றன. கிட்டத்தட்ட இதே விலை வரம்பில் கிடைக்கும் டாடா நிறுவனத்தின் Tiago EV-யானது, Citroen நிறுவனத்தின் இந்த புதிய eC3 Shine கடும் போட்டியாக இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள eC3-ன் ஷைன் வேரியன்ட்டானது எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் விங் மிரர்ஸ், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஸ்டைலிஷ்ஷான 15-இன்ச் டைமண்ட்-கட் டூயல்-டோன் அலாய் வீல்ஸ், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களில் கூடலாக் ஃப்ரன்ட் மற்றும் ரியர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ் (rear faux skid plates) மற்றும் லெதர்-வ்ரேப்ட் ஸ்டீயரிங் உள்ளிட்டவையும் அடங்கும்.

eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் இந்த ஷைன் மாறுபாடு MyCitroen Connect ஆப்ஸுடன் பொருத்தப்பட்டிருக்கும், இது 35 ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்கும். 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஹைட்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்டை கொண்டிருக்கிறது. இந்த புதிய ஷைன் வேரியன்ட்டானது eC3-ன் E-C3 Feel ட்ரிம்மை போலவே வைப் பேக் மற்றும் டூயல்-டோன் எக்ஸ்டீரியர் ஃபினிஷ்களை கொண்டுள்ளது. இந்த அப்டேட்ஸ்கள் மார்க்கெட்டில் eC3 எலெக்ட்ரிக் காரை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் அதே நேரம் ஏற்கனவே கூறியதை போலவே Tiago EV காரிடமிருந்து கடும் போட்டியை eC3 எதிர்கொள்கிறது.

ஏனென்றால் இதன் விலை எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 12.04 லட்சமாக இருக்கிறது. eC3 Shine-ஐ விட குறைவான விலையில் கிடைத்தாலும் கூட க்ரூஸ் கன்ட்ரோல், ரெயின்-சென்சிங் வைப்பர்ஸ், பவர் டெயில்கேட், கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் போன்ற கூடுதல் அம்சங்களை Tiago EV கொண்டுள்ளது. இதற்கிடையே eC3 Shine வேரியன்ட்டை பொறுத்த வரை பிரெஞ்சு வாகன உற்பத்தி நிறுவனமான Citroen இதன் பேட்டரி பேக்கிற்கு 7 ஆண்டுகள்/1,40,000 கிமீ வாரண்டியையும், இதன் எலெக்ட்ரிக் மோட்டருக்கு 5 ஆண்டுகள்/1,00,000 கிமீ வாரண்டியையும், எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கிற்கு 3 ஆண்டுகள்/1,25,000 கிமீ வாரண்டியையும் வழங்குகிறது. கூடுதலாக நிறுவனம் கார், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிக்கு பல்வேறு எக்ஸ்டன்டட் வாரண்டி ஆப்ஷன்களையும் வழங்குகிறது.

இதனிடையே eC3 ஆனது 56bhp பவர் மற்றும் 143Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் 29.2kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கிறது. 6.8 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்டக்கூடிய இந்த மாடல், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை செல்ல கூடியது.
eC3-ஐ மணிக்கு 107 கிமீ வேகத்தில் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *