இருந்த ஒரு குறையையும் சரி செய்த சிட்ரோன்! இனி இந்த காரோட சேல்ஸ் பிச்சிக்கப்போவுது!
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரின் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளது. அதன்படி டாப் வேரியன்ட்களில் இந்த ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேனுவல் ஆப்ஷன் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் சி3 ஏர்கிராஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்த கார் அறிமுகமாகும் போது வெறும் மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து வேரியன்ட்களிலும் மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது புதிதாக டாப் வேரியன்ட் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார் ஐந்து மற்றும் ஏழு சீட்டர் ஆப்ஷன்களுடன் இருக்கிறது. இந்த இரண்டு ஆப்ஷன்களிலும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் என்பது அறிமுகமாகியுள்ளது. இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் கார் அறிமுகமாகி சில மாதங்கள் ஆனாலும் மக்கள் மத்தியில் பெரிய ஈர்ப்பை கொண்டு வரவில்லை. இதனால் இதன் விற்பனை மிக மெதுவாகவே நடந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இல்லாதது தான் என கூறப்படுகிறது.
இந்த காரை விரும்பும் பல வாடிக்கையாளர்கள் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனை விரும்புவதாக அந்நிறுவனத்திற்கு தெரிய வந்தது. இதனால் நிறுவனம் தற்போது ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனை இந்த காரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை சி3 மற்றும் சி5 ஏர்கிராஸ் ஆகிய கார்களின் டிசைனை சேர்த்தார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் முன் பக்கமும் பின்பக்கமும் சிட்ரோன் சி3 காரின் வடிவமைப்பு போல இருக்கிறது. இதன் பானட் பகுதி சற்று உயரமாக இருக்கிறது. பெரிய வீல் பேஸ் வழங்கப்பட்டுள்ளன. டோர்களில் கிளாடிங் அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியில் முழுவதும் சி5 ஏர் கிராஸ் கார் போல இருக்கிறது. இந்த காரின் சஸ்பென்ஷன் செட்டப் சாஃப்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளமேடுகள் நிறைந்த சாலையில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இந்த கார் பயணிக்கும்.
இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் மேனுவல் வேரியன்ட் கார்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர் வெர்ஷன் எப்படி இருக்கிறதோ அதே போலவே இந்தியாவிலும் இந்த கார் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக் பொருத்தப்பட்டுள்ளது.
சிட்ரோன் நிறுவனம் இரண்டு டாப் வேரியன்ட்களில் மட்டுமே இந்த ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனை வழங்கியுள்ளது. இந்த காரின் பவர் மற்றும் டார்க் குறித்த எந்த மாற்றங்களும் ஆட்டோமேட்டிக் கியர் காரில் இல்லை. இந்த காரின் உட்புறத்தில் டேஷ்போர்ட்டில் 10.2 இன்போடைமென்ட் சிஸ்டம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உடன் இருக்கிறது.
இதன் டேஷ்போர்டுகள் பிரான்ஸ் மற்றும் ஆனோடைஸ்டு கிரே ஆகிய தீம்களில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் பகுதி பேஜ் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்டோமேட்டிக் கியர் என்பதால் இதற்கு கியர் ராடு இருக்கும் பகுதியில் கியர் நாப் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக அனைத்து ஆட்டோமேட்டிக் கியர் கார்களிலும் உள்ளதே போல இந்த காரிலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை மிட் சைஸ் எஸ்யூவி ரக காராகும். இது மார்க்கெட்டில் உள்ள பல கார்களுக்கு போட்டியாக களமிறங்கியது ஹூண்டாய் கிரெக்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.