Coconut Suji Cake : தேங்காய், ரவையில் கேக்! வித்யாசமான புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்!

தேவையான பொருட்கள்

ரவை – ஒரு கப்

பால் – ஒன்றரை கப்

இனிப்பில்லாத கோகோ பவுடர் – கால் கப்

பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்

டெசிகேடட் கோக்கனட் – 6 டேபிள் ஸ்பூன்

வைப்ட் க்ரீம் – தேவையான அளவு

பொடித்த சர்க்கரை – அரை கப்

உப்பில்லாத வெண்ணெய் – கால் கப்

வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு காய்ந்த மிக்ஸியில் ரவையை சேர்த்து அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பால், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் அனைத்தும் சேர்த்து குறைவான தீயில் அனைத்தும் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். இந்த கலவையை கொதிக்கவிடக்கூடாது.

இந்த மிதமான சூட்டில் உள்ள கலவையை மாவில் சேர்க்க வேண்டும். மெதுவாக அனைத்தும் கலந்து வரும் வரை கலக்க வேண்டும். தயார் செய்த கேக் மாவை மூடி 15 நிமிடங்கள் ஊறவிடவேண்டும்.

அவனை 180 டிகிரியில் 15 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்ய வேண்டும். கேக் டின்னில் வெண்ணெய் தடவி, சிறிது காய்ந்த மாவை சேர்த்து தட்டிவிடவேண்டும்.

பின்னர் கேக் மாவில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலக்க வேண்டும். அதிகமாக கலந்துவிடக்கூடாது.

கேக் டின்னில் மாவை சேர்த்து 180 டிகிரி செல்சியஸில் அரை மணி நேரம் வரை பேக் செய்ய வேண்டும் அல்லது அவ்வப்போது டூத் பிக் வைத்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் டெசிகேடட் கோக்கனட்டை குறைவான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்க வேணடும். அதில் 2 டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

பேக் செய்த கேக்கில் சிறிது வைப்ட் க்ரீமை பரப்ப வேண்டும். தேங்காய் வைத்து கார்னிஷ் செய்ய வேண்டும். கேக் முழுமையும் தேங்காய் வைத்து கார்னிஷ் செய்ய வேண்டும். செய்து முடித்தவுடன் பரிமாறலாம்.

குறிப்புகள்

பாலுக்கு பதில் தேங்காய் பாலும் பயன்படுத்தினால், தேங்காயின் சுவை சிறிது கூடுதலாக இருக்கும்.

உங்களுக்கு தேவைப்பட்டால் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்கள் உங்களுக்கு பிடித்தது சேர்த்துக்கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *