தேங்காய் தண்ணீர்.. திகட்ட திகட்ட நன்மையை தரும் தித்திப்பு தண்ணீர்.. ஆமா, சர்க்கரை நோயாளி குடிக்கலாமா
தேங்காய் தண்ணீரை யாரெல்லாம் குடிக்கலாம் தெரியுமா? இந்த தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இயற்கையாகவே நீர் சத்தை அதிகரிக்கும் பானம் இந்த தேங்காய் தண்ணீராகும்.. இதில் எந்த வித ரசாயனமும் இல்லை.. தினந்தோறும் குடிப்பதால் குறிப்பாக வெயில் காலங்களில் குடிப்பதால் உடலில் நீர் சத்து இருக்கும்.
இளநீரை எடுத்துக் கொண்டால், காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்று பிரச்சினைகளை தீர்க்கிறது. வயிற்றில் அல்சர் இருந்தாலும் தொற்று இருந்தாலும் அதை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள தொற்றுகளையும் நீக்குகிறது. உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.
எனர்ஜி: இளநீரில் நிறைய வைட்டமின்கள், மினரல்கள், எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இவை உடலுக்கு தேவையான எல்க்ட்ரோலைட்டுகளை திரும்ப பெற உதவுகிறது. கோடை காலங்களில் வியர்வையால் உடலில் உள்ள எனர்ஜி போய்விடும். இந்த இளநீர் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
உடலில் ஜீரணமாகாமல் தேவையில்லாத உணவு பொருட்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றுகிறது.. மலச்சிக்கலுக்கு அருமருந்தாகிறது.. குடலில் உள்ள நச்சுகளை முறிக்கிறது.. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.
இளநீர்: இளநீரில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற தண்ணீரை வெளியேற்றி சிறுநீரக கற்களை உருவாவதை தடுக்கிறது.
உடல் எடை குறைய அருமருந்து. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உணவுக்கு முன்னர் இளநீரை எடுத்துக் கொள்ளலாம். இந்த இளநீரை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் பொட்டாசியம், மெக்னீஷயம், விட்டமின் சி, எல் ஆர்ஜினைன் ஆகியவை இருப்பதால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.
தேங்காய் தண்ணீர்: ஆனால், வெறுமனே தேங்காய் தண்ணீரை 7 நாட்கள் குடித்து வந்தால் இன்னும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றனவாம்.. நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறுகிறது.. சிறுநீரகம் சிறப்பாக செயல்படுகிறது.. சிறுநீரக பாதையிலுள்ள தொற்றுகள், நச்சுக்கள், நீங்குகின்றன.. சிறுநீரக கற்கள் இருந்தாலும், அவைகளை உடைத்து வெளியேற்றும் திறன் இந்த தேங்காய் தண்ணீருக்கு உண்டு.
காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் அழிக்கும் சக்தி இந்த தேங்காய் தண்ணீருக்கு இருக்கிறதாம். அஜீரண கோளாறு உள்ளவர்கள், நார்ச்சத்து நிறைந்த இந்த தண்ணீரை குடித்து வரலாம்… இதனால் உடல் எடை கூடாது.. தித்திப்பு பானமாக இருந்தாலும்கூட, உடலில் கொழுப்புக்கள் சேராது.. எனவே, உடல்எடை குறைக்க தேங்காய் தண்ணீர் மிகவும் நல்லது.. இதனை குடித்து வரும்போது, பசி உணர்வு எடுக்காது..
ரத்த அழுத்தம்: தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியையும் அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட பெரிதும் துணைநிற்கிறது இந்த தேங்காய் தண்ணீர். உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தேங்காய் தண்ணீர் மருந்தாகிறது..
தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.. நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த இந்த தேங்காய் தண்ணீர், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஏற்ற பானமாக உள்ளது..!!