கோவை: அடையாளைத்தை மறைத்து ஏழை மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் இளைஞர்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உணவின்றி யாரும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் தனது அடையாளத்தை மறைத்து சொந்த செலவில் புதுமையான முறையில் நம்ம வீட்டு சாப்பாடு என்ற திட்டத்தில் தினமும் 40 முதல் 50 பேருக்கு மறைந்த கேப்டன் விஜயகாந்தைப் போலவே இலவசமாக உணவு வழங்கி வரும் இளைஞர்.

கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய இவர் வங்கிகளில் கடன்கள் பெற்றுத்தருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அவ்வப்போது சில சமூக சேவைகளும் செய்து வருகிறார்.இவருக்கு நீண்ட நாட்களாகவே உணவில்லாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்துள்ளது. ஆனால் போதிய நிதிவசதி இல்லாததால் அதனை செயல்படுத்த முடியாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த மறைவின் போது தொலைகாட்சியில் பேசிய ஒருவர் தான் வேலை இல்லாமல், உணவில்லாம் இருந்த போது விஜயகாந்த்தின் அலுவலம் சென்றுதான் உணவு சாப்பிடுவேன் என்று கூறியது இவருக்கு உனடடியாக இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எண்ணம் தோன்றியுள்ளது.

இதற்காக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டப உரிமையாளர் உதவியுடன் குறைந்த வாடகைக்கு மண்டபத்தை வாடக்கைக்கு எடுத்து, தினமும் 40 முதல் 50 பேருக்கு இலவசமாக உணவு வழங்கும்திட்டத்தை நம்ம வீட்டு சாப்பாடு என்ற பெயரில் தொடங்கியுள்ளார்.

இதில் சாப்பாடு, குழம்பு, ரசம், தயிர், கலவை சாதம், முட்டை, பால் உள்ளிட்ட உணவுகளை வீட்டு முறைப்படை சமைத்து பரிமாறுகின்றார். இதில் வயது முதிந்தோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வேலை இல்லாதவர்கள் போன்றோர்களை வந்து உணவருந்திச் செல்கின்றனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளை பணியில் அமர்த்தி உணவும் வழங்கி இச்சேவையை செய்து வருகிறார்.

இங்கு சாப்பிட வருவோர் சாப்பிட்டு முடித்து தங்களால் இயன்ற தொகையை அங்கு வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போடலாம். பணம் இல்லாதவர்கள் இலவசமாக உணவு சாப்பிட்டுச் செல்லலாம் எனவும்.மேலும் இந்த திட்டத்தை பல இடங்களில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் அதேபோல் இதனை செயல்படுத்தும் போது தன்னுடைய பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மறைத்தே இச்சேவையை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *