கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது – கோவையில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன்..!
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் கூறியதாவது:-
பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலத்தில் இன்று நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார்.
தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது பா.ஜ.க.வினர் மேலும் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது.
மக்களவை. தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று 3- வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் கூட்டணி உறுதியாகும். கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.