கோவை விழா கொண்டாட்டம் : டபுள் டக்கர் பேருந்தில் ஆதரவற்ற குழந்தைகள் உற்சாக பயணம்
கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி இந்த பேருந்து பயணத்தை தொடங்கி வைத்தனர். இந்தப் பேருந்தில் வரும் ஜனவரி 8ம் தேதி முன்பதிவு செய்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த பேருந்துக்கு கோவை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பேருந்தில் கோவை மாநகருக்குள் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம். தினமும் ஏறத்தாழ 600″க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பேருந்தில் பயணம் செய்வதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆதரவற்ற 20 குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து காந்திபுரம் வரை பயணம் செய்தனர். முதல் முறையாக டபுள் டக்கர் பேருந்தில் பயணம் குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இவர்களுக்கு கோவை விழா நிர்வாகிகள் சாக்லேட் குடுத்து மகிழ்வித்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.