Cold Remedy : சளிக்கு ஒரு சிறந்த நிவாரணம் – இத மட்டும் செஞ்சு பாருங்க!

நுரையீரலில் தங்கியிருக்கக்கூடிய கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். சைனஸ், ஆஸ்துமா, மூச்சு வாங்குவது, வறட்டு இருமல் என சுவாச உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும் ஒரு அருமையான டிப்ஸை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை – 2
(வெற்றிலையை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதில் உள்ள காம்பு, நடு நரம்பு, கீழ் பகுதி ஆகிய மூன்றையும் நீக்கிவிடவேண்டும்)
வெற்றிலை செரிமான பிரச்னைகளை சரிசெய்யும். உடலில் உள்ள சளியை மலத்தின் வழியாக வெளியேற்றும். மாத்திரை மருந்துக்கு கட்டுப்படாத ஆஸ்துமாவை சரிசெய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஏலக்காய் – 1
ஏலக்காய் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு தரும். ஆஸ்துமா, மூக்கடைப்பு போன்றவற்றை சரிசெய்யும். சுவாசம் தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். ஈறு வீக்கத்தை சரிசெய்து, வாய் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
கிராம்பு
தொண்டை மற்றுமு நுரையீரல் தங்கியிருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும். செரிமான பிரச்னையை சரிசெய்யும். நுரையீரலில் தங்கியிருக்கக்கூடிய சளியை மலத்தின் வழியாக வெளியேற்றும். புற்றுநோய் செல்களை அழிகக்கூடிய தன்மை கிராம்புக்கு உண்டு. பல் வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் என அனைத்தையும் சரிசெய்யும்.
மிளகு – 5
மிளகு உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது. நுரையீரலில் ஏற்படும் நோய் தொற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது. நுரையீரலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவும். தொண்டை கரகரப்பு, சளி, இருமலையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதனுடன் ஒரு துண்டு வெல்லம் அல்லது சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
வெற்றிலையில் அனைத்தையும் வைத்து மெதுவாக மென்று சாப்பிடவேண்டும். இதை மெல்லும்போது ஏற்படும் உமிழ்நீரை அப்படியே விழுங்கவேண்டும். சக்கையை மட்டும் துப்பிவிடவேண்டும்.
சளி பிடித்தவுடனேயே இதை சாப்பிட உங்களுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும். வறட்டு இருமல் உள்ளிட்டவற்றையும் சரிசெய்யும். உடலில் பல்வேறு பிரச்னைகளுக்கும் உதவும்.