நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ராகிங் கொடுமை.. சென்னையில் சீனியர்கள் மீது கல்லூரி மாணவர் புகார்!
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சீனியர் மாணவர்கள் கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கல்லூரியில் தனது சீனியர் மாணவர்கள் மீது சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சீனியர் மாணவர்கள் தன்னை கொடுமை செய்வதாக அவர் புகார் அளித்துள்ளார்.
தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, கடுமையாக தாக்கி பணம் பறித்ததாகவும், சீனியர் மாணவர்கள் தொடர்ந்து கொடுமை செய்து வருவதாகவும் மாணவர் புகார் அளித்துள்ளார்.
அண்மையில் கோவையில் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில், மது குடிக்க பணம் கேட்டு, தராத ஜூனியர் மாணவரை கட்டி வைத்து மொட்டை அடித்து ராகிங் செய்ததாக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.