குழந்தை பிறந்ததும் கோமாவுக்குச் சென்ற இளம்பெண்: 19 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்த உண்மை

ஜேர்மனியில் வாழும் பெண்ணொருவரைத் தேடி இரண்டு இளம்பெண்கள் வந்தார்கள். அவர்கள் மூவரும் சந்தித்துக்கொண்டபிறகுதான், தங்களைக் குறித்த அதிரவைக்கும் பின்னணியை அவர்கள் அனைவரும் தெரிந்துகொண்டார்கள்.

சமூக ஊடகமொன்றில் தன்னைப்போலவே ஒருவர் இருப்பதைக் கண்ட இளம்பெண்

ஜார்ஜியா நாட்டில் வாழ்ந்துவரும் Ano Sartania (21) எனும் இளம்பெண்ணின் தோழிகள், அவரிடம், தலைமுடியின் நிறத்தை மாற்றிக்கொண்டு சமூக ஊடகத்தில் நடன வீடியோக்கள் போடுவது நீதானே என்று கேட்டிருக்கிறார்கள்.

நமக்கும் நடனத்துக்கும் காத தூரமாயிற்றே என Ano கூற, அவருக்கு சில வீடியோக்களை ஃபார்வேர்ட் செய்திருக்கிறார்கள் தோழிகள். பார்த்தால், வீடியோவிலிருக்கும் பெண் அப்படியே Anoவைப் போல் இருக்கிறார்.

யார் அந்த பெண் என்று விசாரித்து ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்துவிட்டார் Ano. விசாரித்ததில் அவர் பெயர் Amy Khvitia (21) என்பதும், அவர் தனது சகோதரி என்பதும், தாங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

அதிரவைத்த பின்னணி

உண்மை என்னவென்றால், ஜார்ஜியா நாட்டில், குழந்தைகளை அவற்றின் பெற்றோரிடமிருந்து பிரித்து சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கும் கும்பல்கள் சர்வசாதாரணமாம்.

பிரசவத்துக்குச் செல்லும் தாய்மார்களிடம், பிள்ளை இறந்தே பிறந்தது என்று பொய் சொல்லிவிட்டு, செவிலியர்கள் சிலர் கூட பிள்ளைகளை கருப்புச் சந்தையில் விற்றுவிடும் அநியாயமும் நடக்கிறதாம்.

அவ்வகையில், Aza Shoni என்னும் பெண் பிரசவத்துக்குச் செல்ல, பிரசவித்ததும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட, கோமாவுக்கே சென்றுள்ளார் அவர்.

அவரது பிள்ளைகள் இறந்தே பிறந்ததாக பொய் சொல்லி ஏமாற்றி, அவரது இரட்டைப் பிள்ளைகளை கருப்புச் சந்தையில் விற்கும்படி Gocha Gakharia என்னும் நபரிடம் கொடுத்திருக்கிறார்கள் செவிலியர்கள் சிலர்.

அந்த Gocha Gakharia வேறு யாருமில்லை, Azaவின் கணவர்தான். தன் மகள்கள் என தெரியாமலே தன் பிள்ளைகளை விற்றிருக்கிறார் Gocha.

19 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்த உண்மை

Anoவும் Amyயும் வெவ்வேறு பெற்றோர்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட நிலையில், ஒரே ஊரில் சில மைல் தொலைவு வித்தியாசத்தில்தான் இருவரும் வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.

பின்னர் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான முயற்சியில் இருவரும் தீவிரமாக இறங்க, தங்களைப் பெற்ற தாய் ஜேர்மனியில் இருப்பதைத் தெரிந்துகொண்டு ஜேர்மனிக்கே சென்றுவிட்டார்கள் இருவரும்.

Aza, தன் பிள்ளைகள் பிரசவத்திலேயே இறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த நிலையில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைத் தேடி வந்த இளம்பெண்கள் இருவரும் தன் மகள்கள் என தெரியவர, அவர்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார் Aza. இந்த சந்திப்பு 2021இல் நடந்திருந்தாலும், தற்போது பல ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *