பாரதிராஜா வேண்டாம் என்று உதறிய காமெடியன்! இன்று பாக்கியராஜால் உச்சம் தொட்ட நடிகர்!
கவுண்டமணி என்றாலே நமக்கு சிரிப்பு வரும். அப்படி 70களில் 80களில் அவரது கால்ஷீட் வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் படம்.
அப்படி டைரக்டர்களை தயாரிப்பாளர்கள் துரத்தியது கூட உண்டு. ஆனால் அவர் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்று தெரியுமா ? அவருக்கு யார் உதவி செய்தார் என்று தெரியுமா?.
பதினாறு வயதினிலே படத்தை ரஜினி நடித்து இருந்தார். ரஜினியே ஒரு துணை கேரக்டர் தான். ஆனால் அவருக்கு துணையாக கவுண்டமணி இருப்பார். அவருடைய முதல் படம். 16 வயதினிலே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அனைவரும் அனைத்து கேரக்டர்களையும் நினைவில் வைத்திருப்பார்களா? என்று தெரியவில்லை. ஆனால் பாரதிராஜா கவுண்டமணியை மறந்துவிட்டார். உதவியக்குனராக 16 வயதினிலே படத்தில் பணிபுரிந்த பாக்கியராஜ் கவுண்டமணியை மறக்கவில்லை.
இப்படி அடுத்த படம் “கிழக்கே போகும் ரயில் எடுக்கப்படுகிறது. அதற்கு காந்திமதியின் கணவனாக ஒரு கேரக்டர் வேண்டும் அதை யாரை போடலாம்? என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுதுதான். பாரதிராஜா டெல்லி கணேசன் போடலாம் என நினைத்து இருந்தார். ஆனால் பாக்கியராஜ் கவுண்டமணி நடித்தால் நன்றாக இருக்கும் என ஒரு மனதில் ஓடிக்கொண்டே இருந்துள்ளது.
இப்படி வாய்ப்பு கிடைக்காத என தினமும் பாக்யராஜை சந்திக்க கவுண்டமணி வருவாராம். 92c இல் தான் அனைவரும் கூடுவார்கள். அதனால் அந்த இடத்திலேயே கவுண்டமணி காத்திருப்பாராம்.
அப்படி ஒரு நாள் காந்திமதிக்கு வேடம் போட்டு அவரும் தேர்வாகிறார். அவரின் கணவருக்கு பாரதிராஜா டெல்லி கணேஷ் தான் வேண்டும் என உறுதியாக இருக்கிறார். ஆனால் பாக்கியராஜ் டெல்லி கணேஷ் நன்றாக நடிப்பவர்தான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் அவர் ஒரு மாடர்ன் லுக். இந்த படம் கிராம சம்மந்தமான படம். அதனால் கவுண்டமணியும் கிராம சம்மந்தமான தோற்றம் இருப்பதால் கதாபாத்திரம் சரியாகிவிடும் என்று பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் கூறியுள்ளார்.
உடனே பாரதிராஜா ” அட போயா! ஆளும் அவன் மண்டையும் அவன் வேண்டாம்” என்று சொல்லி இருக்கிறார்.
டெல்லி கணேஷ் நாடகத்தில் நடித்திருப்பவர் அவருக்கு இந்த கதாபாத்திரம் செட் ஆகும் என பாரதிராஜா சொல்கிறார். ஆனால் பாக்கியராஜும் கவுண்டமணியும் நாடகத்தில் நடித்தவர் தான் என்று கூற, ஏதோ நாடகம் பண்ணுகிறீர்கள்.