பூர நட்சத்திரத்தில் வரும் சஷ்டியின் விஷேசம் என்ன தெரியுமா?
மாதம்தோறும் சஷ்டி விரதம் கடைபிடிக்கப்பட்டாலும் பூரம் நட்சத்திரத்தில் வரும் சஷ்டி விரதம் சிறப்புமிக்கது.
முருகனுக்கு உரிய கிழமையான செவ்வாய் கிழமையில் முருகனை வேண்டி வழிபடுவது முருக பெருமானின் தீர்க்கமான அருளை நமக்கு வழங்குகிறது. செவ்வாய் கிழமையோடு வரும் சஷ்டி நாள் விஷேசமானது. அதிலும் இந்த இரண்டுடன் பூரம் நட்சத்திரமும் இணையும் சஷ்டி செல்வ கடாட்சம் அருள்வது.
பூரம் நட்சத்திரம் மகாலெட்சுமிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். செல்வம், தானியம், தைரியம் என அஷ்ட லெட்சுமிகளையும் தன்னகத்தே கொண்டு காட்சி மகாலெட்சுமி. அவருக்கு உரிய பூரம் நட்சத்திரம் சஷ்டி நாளில் சேர்ந்து வருவது முருக பெருமானின் அருளோடு, செல்வத்தை வழங்குகிறது.
இந்த சஷ்டி நாளில் அதிகாலையே நீராடி விரதம் இருந்து முருகபெருமானை வேண்டி முருக மந்திரங்களை உச்சாடனம் செய்வது வாழ்வில் அருள் பாலிக்கும். மாலை வேளையில் அருகில் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று முருகனை வழிபடுவதும், அபிஷேகத்திற்கு நெய், சந்தனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் வழங்குவதும் கூடுதல் சிறப்பை தரும்.