கம்மி விலை, அதிக திறன்.. டாடாவின் புதிய எலக்ட்ரிக் கார்..
டாடா நிறுவனம் புதிதாக முதல் அட்வான்ஸ்டு பியூர் எலக்ட்ரிக் வாகன அம்சங்கள் நிறைந்த Punch acti.ev என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
acti.ev என்றால் அட்வான்ஸ்டு கனெக்டடு டெக்-இன்டலிஜென்ட் எலக்ட்ரிக் வெஹிகிள், இது ஒரு கட்டமைப்பு என்று அர்த்தம். டாடாவின் எதிர்வரும் தயாரிப்புகள் அனைத்தும் இந்த கட்டமைப்பை பயன்படுத்தி தான் நிச்சயம் வரும்.இதில் பஞ்ச் எலக்ட்ரிக் கார், ப்யூர் எலக்ட்ரிக் ஆர்க்கிடெக்சர் சார்ந்த முதல் வாகனமாகும். இதில் மல்டிபிள் பாடி ஸ்டைல் மற்றும் சைஸ்கள் இருக்கும். நேற்றுமுதல் பஞ்ச் இவி வாகனத்துக்கான புக்கிங் தொடங்கியதால் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர். புக்கிங் செய்வதற்கு அருகில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களை விற்கும் டாடா மோட்டார்ஸ் ஷோரூமுக்குச் சென்று முன்பதிவு தொகையாக ரூ.21,000 செலுத்த வேண்டும். ஆன்லைனிலும் புக்கிங் செய்யலாம்.ஆக்டி இவியில் உலக தர நிர்ணயங்களுக்கு ஏற்ப பரிசோதிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக் டிசைன் பொருத்தப்பட்டுள்ளது. அதன் திறன் மற்ற பேட்டரிகளை விட 10 சதவீதம் அதிகமாகும். இந்த பேட்டரி மூலம் 300 முதல் 600 கி.மீ. வரை பயணிக்கலாம்.ஆக்டி இவி 7.2 கிலோ வாட் முதல் 11 கிலோ வாட் ஏசி ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 150 கிலோ வாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளதால் கூடுதலாக 100 கி.மீ. செல்லலாம். எதிர்காலத்தில் ஜிஎன்கேப் மற்றும் பிஎன்கேப் பாதுகாப்பு புரோட்டோகால் கொண்ட ரீஎன்போர்ஸ்டு பாடி ஸ்ட்ரக்சர் அமைக்கப்பட்டுள்ளதால் உறுதியாக இருக்கும்.ஆக்டி இவியில் அதிகபட்ச கேபின் ஸ்பேஸ் மற்றும் ஸ்டோரேஜ், ஃபிளாட் புளோர் உள்ளது. அதன் குறைந்த புவியீர்ப்பு மையம் வாகனத்தை இலகுவாக ஓட்டுவதற்கு உதவும். எதிர்காலத்துக்குத் தேவையான கட்டமைப்புடன் கூடுதல் கம்ப்யூட்டிங் ஆற்றலையும் கொண்டுள்ளது. இதனால் இந்த வாகனம் அதிக பாதுகாப்பு தரத்தையும் கையாளுவதற்கு எளிதாகவும் இருக்கும்.இதன் 5ஜி தன்மை அட்வான்ஸ்டு நெட்வொர்க் வேகம் மற்றும் தடையில்லா இணைப்பைப் பெற்றிருக்கும். இதுமட்டுமல்லாமல் ஆக்டி இவி சிறந்த இணைப்பை உறுதியளிப்பது மட்டுமல்லாமல், மென்பொருள் மற்றும் பிற அம்சங்களுக்கான மேம்பட்ட ஓவர்-தி-ஏர் அப்டேட்களையும் வழங்குகிறது.ஜனவரியில் தொடங்கும் டாடா பஞ்ச் இவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது. அதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.12 லட்சம். அதன் நேரடி போட்டியாளர் என்றால் சிட்ரோயன் இசி3 வாகனமாகும். டாடா டியாகோ இவி, எம்ஜி காமெட் இவி மாடல்களுக்கு பிரீமியம் மாற்று வாகனமாக திகழும்.