ஓலாக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் போட்டி நிறுவனங்கள்! வரிசை கட்டி நிற்கும் 7 ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகமாகி வருகிறது. இந்த மார்க்கெட் பெரிதாக மாறி வருவதால் புதிய மாடல் எலvக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்பம் அதிக பிராக்டிகாலிட்டி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன. இப்படியாக இந்தியாவில் வரவுள்ள ஏழு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: டிவிஎஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி வேரியன்ட் ஸ்கூட்டராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது என்ட்ரி லெவல் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை தெரிந்து கொள்ள நாம் காத்திருக்க வேண்டும்.

ஏத்தர் ரிஸ்டா: ஏத்தர் நிறுவனம் தனது புதிய மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ரிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த டீசரை சமீபத்தில் வெளியிட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்னும் ஆறு மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்று பெரிய மற்றும் அதிக பிராக்டிகல் அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரியவர்கள் ஓட்டி செல்லும் வகையில் இந்த ஸ்கூட்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா இவி: ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது காலடித்தடத்தை எடுத்து வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல் தயாரிப்பாக ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிக ரேஞ்ச் மற்றும் அதிக பிராக்டிகல் அம்சங்களுடன் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த ஸ்கூட்டருக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஓலா நிறுவனம் சமீபத்தில் தான் தனது புதிய கமர்ஷியல் செக்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்திருந்தது. இது குறித்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தன. குறைவான பாடிவொர்க் உடன் சிங்கிள் சீட் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி ஷாப் ஆப்ஷன் உடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாஸ்ட் மைல் டெலிவரி பயன்பாட்டுக்காக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படலாம்.

சுஸூகி பர்க்மேன் இவி: சுஸூகி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பானில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் தனது எலெக்ட்ரிக் பர்க்மன் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தி இருந்தது. இது ஸ்வாப்பிள் பேட்டரி ஆப்ஷன் கெண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைனிலேயே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இந்திய மண்ணிலேயே சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஹீரோ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விடா பிராண்டில் புதிதாக இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது அடுத்த நிதியாண்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்த விலை மற்றும் மீடியம் ரேஞ்ச் விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் குறித்த மற்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஹீரோ நிறுவனம் தனது விழா பிராண்ட் மூலம் தற்போது மார்க்கெட்டில் உள்ள ஓலா, ஏத்தர், உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக புதிதாக இந்த ஸ்கூட்டர்களை மிக சர்ப்பிரைசாக வடிவமைத்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஹிட்டானால் மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவுக்கு புரட்சி ஏற்படும் என கூறலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது ஓலா நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்து வருகிறது. இருந்தாலும் மற்ற நிறுவனங்கள் ஓலா நிறுவனத்திற்கு போட்டி தரும் வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் அடுத்து விரைவாக அறிமுகமாக உள்ள 7 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மேலே உள்ள ஸ்கூட்டர்கள் தான்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *