சிறுமி சித்ரவதை புகார்… திமுக எம்.எல்.ஏவின் மகன், மருமகள் கைது!
இந்நிலையில் இவர் எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். பணியில் இருந்த போது தன்னை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும், சூடு வைத்து தாக்கியதாகவும் கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டியலினத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் குடும்ப சூழ்நிலை காரணமாக இடைத்தரகர் மூலம் எம்.எல்.ஏ . மகன் வீட்டில் பணி கிடைத்தது.
இவரது தாயார் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணி செய்து வருகிறார். 12 ம்வகுப்பு படித்து முடித்த இந்த சிறுமி கடந்த 7 மாத காலமாக ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ரேகாவை அடித்து துன்புறுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளனர். சிறுமி பொங்கலுக்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். மகளின் உடலில் இருந்த காயங்களை பார்த்த செல்வி, அது குறித்து காரணம் கேட்கவும், ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் அடித்து துன்புறுத்தியதை தாயிடம் கதறி அழுதபடி சொல்லி இருக்கிறார்.மறுநாள் காலை, தனது மகளின் காயங்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு தாய் கூட்டிச் சென்றனர். அங்கு சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மதிவாணன் அவரது மனைவி மெர்லினாமீது புகார் அளிக்கப்பட்டது.