சிறுமியின் உயிரைப் பறித்த இசை நிகழ்ச்சி: வெளியான நெஞ்சைப் பதற வைக்கும் விவரம்
பிரபல பாடகர் பாடகர் Taylor Swift-ன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு சாலைப் பயணத்தினை முன்னெடுத்த போது பயங்கர கார் விபத்தில் சிக்கி சிறுமி ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dubbo பகுதி அருகாமையில்
தொடர்புடைய கோர சம்பவத்தின் போது, அந்த சிறுமி Taylor Swift பாடல்களை கேட்டுக்கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 16 வயதான Mieka Pokarier தமது தாயார் மற்றும் சகோதரியுடன் கோல்ட் கோஸ்டிலிருந்து மெல்போர்னுக்கு தங்கள் SUV-ல் பயணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 6 மணியளவில் Dubbo பகுதி அருகாமையில் சிறிய ரக சரக்கு லொறியுடன் இவர்களது SUV மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் Mieka-வின் சகோதரி 10 வயதான Freya படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகனம் ஓட்டிச் சென்ற Mieka-வின் தாயார் Kim Litchfield காயங்களுடன் மீட்கப்பட்டு Dubbo பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோமா நிலையில்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட Freya தற்போது இடுப்பு எலும்பு முறிவு மற்றும் கால் உடைந்த நிலையில் மூளையிலும் ஏற்பட்டுள்ள காயங்களால் கோமா நிலையில் உயிருக்கு போராடுவதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த Mieka விபத்தில் சிக்கி சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். விபத்தின் போது அவர் Taylor Swift-ன் All of the Girls You Loved Before என்ற பாடலைக் கேட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று NSW பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.