காண்டம் விற்பனை தூள்.. இளம் பெண்களை டார்கெட் செய்யும் நிறுவனங்கள்.. என்ன நடக்குது..?!

இந்த வார்த்தையைச் சொல்வதற்குக் கூட கூச்சப்பட்ட இந்திய மக்கள், தற்போது அத்தியாவசிய பொருட்கள் போல வாங்கி வருவதாகச் சந்தை ஆய்வுகள் கூறப்படுகிறது.

காண்டம் என்பது பாதுகாப்பு கருவி என்பதைத் தாண்டி தற்போது கார்ப்ரேட் நிறுவனங்கள் இதை உல்லாச கருவியாக விளம்பரப்படுத்தத் துவங்கியுள்ளனர். இளம் தலைமுறையினரை டார்கெட் செய்தும், குறிப்பாகப் பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் பொருட்கள் தயாரிக்கப்பட்டும் விளம்பரப்படுத்தப்படும் வருகிறது.

புள்ளியிட்ட, வட்ட வடிவமிட்ட, இனிப்பு சுவை மற்றும் இருட்டில் மின்னும் வகைகள் என பல்வேறு வடிவமைப்புகளுடன் காண்டம் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படும் காரணத்தால் கடந்த 2023 ஆம் ஆண்டில் இதன் விற்பனை கிட்டத்தட்ட இரட்டிப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.

IQVIA நுகர்வோர் சுகாதார சில்லறை தணிக்கை தரவுகளின்படி, ரூ.1,755 கோடி மதிப்பிலான காண்டம் விற்பனை பிரிவு கடந்த ஆண்டு 13 சதவீத மதிப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது 2022 ஆண்டின் 7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது பெரிய அளவிலான உயர்வு.

காண்டம் என்பது வெறும் பாதுகாப்புக்காக மட்டுமல்ல, அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக மாறி வருவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய காண்டம் விற்பனை சந்தையில் சுமார் 30.1 சதவீத பங்கீட்டைக் கொண்ட மாண்ஃபோர்ஸ் காண்டம் தயாரிப்பாளரான Mankind Pharma நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான ராஜீவ் ஜூன்ஜா கூறுகையில் காண்டம் எப்போதும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. இளைய தலைமுறையினர் இது இன்பத்தைத் தடுக்கும் ஒரு பொருள் என்றே கருதி வந்தனர்..

எனவே, புதுமையான வடிவமைப்புகள் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவியுள்ளன. இதேபோல் ஆண்கள் மட்டுமே தேர்வு செய்பவர்களாக இருந்த நிலையில், தற்போது பெண்களும் பல வகைகளைத் தேர்வு செய்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் ரெக்கிட் நிறுவனத்தின் டியூரெக்ஸ் காண்டம் பிராண்ட் சுமார் 14.9 சதவீத சந்தை பங்கைக் கொண்டுள்ளது, அதனைத் தொடர்ந்து டி.டி.கே ஹெल्த் கேர் நிறுவனத்தின் ஸ்கோர் 8.5 சதவீத பங்கையும், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் காமசூத்ரா 8 சதவீத பங்கையும் கொண்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில வருடத்தில் மிகவும் மெல்லிய வடிவமைப்பு காண்டம், vegan காண்டம், கெமிக்கல் ஃப்ரீ காண்டம், cruelty-free காண்டம் என பல வகைகளில் காண்டம் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பாதுகாப்பான உடலுறவு நடைமுறைகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், காண்டம் முதன்மையாகக் கருத்தடை மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளை (STIs) தடுப்பதற்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *