கொரோனா தொற்று உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட டெவோன் கான்வே!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே 3 போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து தொடரை 3-0 என்று இழந்துவிட்டது. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி தற்போது கிறிஸ்ட்சர்சில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி தற்போது பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் நியூசிலாந்து தொடக்க வீரர் டெவோன் கான்வேவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய போட்டிக்கு முன்னதாகவே அவருக்கு உடல் நல பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இன்றைய போட்டியில் அவருக்குப் பதிலாக சாத் பவுஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால், பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை. இந்த தொடரில் இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளில் கான்வே 0, 20, 7 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.